Archive for August, 2006

August 21, 2006

அகத்தின் அழகு …


August 15, 2006

எங்கே போனீர்கள்?

‘சின்னப் பசங்கள எதுக்கு கட்டாயப்படுத்தி சேக்குறாங்க’ –
என்று அக்கறைப்பட்டவர்களே !
இப்போது
சின்னஞ்சிறுத் தளிர்கள்தான்
செத்துக் குவிகின்றன..
எங்கே போனீர்கள்?

‘கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலத்தான் சாவு’ –
என்ற தத்துவஞானிகளே !
இங்கு
பேனா பிடித்தப் பிள்ளைகள்தான்
பிணமாய் கிடக்கின்றன.
எங்கே போனீர்கள்?

‘ஒரு அரசாங்க இராணுவம்
எப்படி தன்நாட்டு மக்களையே கொல்லுவாங்க,
சும்மா கதையளக்காத ..’ –
என்னும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளே !
புரிகிறது.
இனிமேலும்
அவர்கள் அந்நாட்டு மக்களாய்
சவக்குழியில் குவியமாட்டார்கள்.
எங்கே போனீர்கள்?

இன்னமும்
‘அமைதியா பேசித் தீர்க்கவேண்டியதுதான .. ‘
என்பீர்களேயானால்,

‘பொத்திக்கிட்டு போங்கடா.’

(முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா இராணுவம் இன்று(14 Aug 2006) நடத்திய கொடூர விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 129 பேர் படுகாயமடைந்துள்ளனர்)